உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லோக்சபா தேர்தல் புறக்கணிப்பு பேனர் கறுப்புக்கொடியை அகற்றிய போலீஸ்

லோக்சபா தேர்தல் புறக்கணிப்பு பேனர் கறுப்புக்கொடியை அகற்றிய போலீஸ்

ஆத்துார்: ரயில்வே சுரங்கப்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக பேனர், கறுப்பு கொடி கட்டப்பட்ட நிலையில், அவற்றை போலீசார் அகற்றினர்.ஆத்துார் அருகே காட்டுக்கோட்டை வழியே, சேலம் - விருதாசலம் அகல ரயில் பாதை செல்கிறது. அதில் காட்டுக்கோட்டை ஊராட்சி, வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவில் அருகே ரயில்வே கேட் உள்ளது. அந்த கேட்டை அகற்றிவிட்டு, 9.96 கோடி ரூபாயில், சுரங்கப்பாலம் அமைக்க, ரயில்வே துறை மூலம் கட்டுமானப்பணி நடக்கிறது. அப்பணியை நிறுத்தக்கோரி, கடந்த பிப்., 5ல், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சாத்தப்பாடி, புனல்வாசல், ஒதியத்துார், வளையமாதேவி, சார்வாய்புதுார், சார்வாய் உள்பட, 8 கிராம மக்கள், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனால் நடவடிக்கை இல்லை. இதனால் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக, நேற்று காலை, விவசாயிகள் சங்கத்தினர், போராட்டக்குழுவினர், மக்கள் சார்பில் ஆங்காங்கே பேனர் வைத்து, ஊர் எல்லை, வழிப்பாதைகளில் கறுப்புக்கொடி கட்டப்பட்டன. தொடர்ந்து தலைவாசல் தாசில்தார் அன்புசெழியன், ஆத்துார் ஊரக போலீசார், அந்த பேனர், கறுப்புக்கொடிகளை உடனே அகற்றினர்.இதுகுறித்து ஐக்கிய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சரவணன் கூறுகையில், ''ஓரிரு வாரத்தில் கலெக்டர், இதுதொடர்பாக தீர்வு காணவில்லை எனில், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை