உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காதல்ஜோடி போலீசில் தஞ்சம்

காதல்ஜோடி போலீசில் தஞ்சம்

ஓமலுார், ஓமலுார் பாலிக்காடு கதிர்செட்டிப்பட்டியை சேர்ந்தவர் பூவரசன், 25. டிப்ளமோ முடித்து சேலம் கொண்டலாம்பட்டியில் டிரான்சிஸ்டர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் நிவேகா, 21. இருவரும் இரு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். நேற்று காலை இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, அருகில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு ஓமலுார் போலீசில் தஞ்சமடைந்தனர். இருவரது வீட்டுக்கு தகவல் அளித்தனர். பெண் வீட்டார் விருப்பமில்லை என தெரிவித்ததால், பூவரசனுடன் நிவேகாவை அனுப்பி வைத்தனர்.-------------------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !