உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எம்.எல்.ஏ., குறித்து பேச எம்.பி.,க்கு தகுதி கிடையாது

எம்.எல்.ஏ., குறித்து பேச எம்.பி.,க்கு தகுதி கிடையாது

ஓமலுார்: ''அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., குறித்து பேச, சேலம் எம்.பி.,க்கு தகுதி கிடையாது,'' என, அ.தி.மு.க.,வின் சேலம் புற-நகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசினார்.சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா கஞ்சநாயக்கன்பட்-டியில் உள்ள வேலாப்பிள்ளை ஏரியில் ஆக்கிரமிப்பு புகார் எழுந்தது. இதனால் நில அளவீடுக்கு கடந்த, 19ல் தாசில்தார் விமல்பிரகாஷ், தி.மு.க.,வை சேர்ந்த கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவியின் கணவர் ராஜேந்திரன் சென்றனர். அப்போது ஏரி அருகே நிலம் வைத்துள்ள அதே பகுதியை சேர்ந்த பெருமாள், அ.தி.மு.க.,வை சேர்ந்த காடையாம்பட்டி ஒன்றிய குழு தலைவி மாரியம்மாள், அவரது கணவர் ஆகியோர், நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்து, தாசில்தாரிடம் வாக்குவாதம் செய்தனர். தீவட்டிப்பட்டி போலீசார் சமா-தானப்படுத்தினர்.இதற்கு முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஓமலுார் தொகுதி, எம்.எல்.ஏ., மணி, அவரது, 'லெட்டர்-பேடு' மூலம் சேலம் கலெக்டருக்கு கடிதம் அனுப்பினார். அதில், 'பெருமாள் நிலம் அருகே உள்ள ஏரி புறம்போக்கு, பல ஆண்டுகளாக அவரது அனுபவத்தில் உள்ளது. ஆனால் ராஜேந்-திரன், ஒரு தனிநபரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு சாலை ஏற்-படுத்தித்தர முயற்சிக்கிறார். அவர் பணத்தை பெற்றுக்கொண்டு புறம்போக்கில் பல வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார். தனிநபருக்கு சாலை அமைக்க நிலம் அளவீடு செய்வதை கைவிட வேண்டும்' என கூறியிருந்தார். இதையடுத்து ஆக்கிரமிப்பாள-ருக்கு ஆதரவாக, எம்.எல்.ஏ., மணி செயல்படுவதாக, லெட்டர்-பேடு, போட்டோவுடன் தகவல் பரவியது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஓமலுார் சட்டசபை தொகுதி மாட்டுக்காரன்புதுாரில், வாக்காளர்களுக்கு, தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் எம்.பி., செல்வக-ணபதி, நன்றி தெரிவித்து கூறுகையில், ''தனிநபர் ஏரி நிலத்தை ஆக்கிரமித்துள்ளார். அதை அளவீடு செய்ய முயன்ற வருவாய்த்துறையினரை மிரட்டி அவமதித்துள்ளனர். ஒரு எம்.எல்.ஏ., லெட்-டர்பேடில் கையெழுத்திட்டு, ஏரி நிலத்தை அளவீடு செய்யக்கூ-டாது என கலெக்டருக்கு கடிதம் கொடுத்துள்ளார். ஒரு மக்கள் பிர-திநிதி ஆக்கிரமிப்புக்கு துணையாக இருப்பது, அத்தொகுதி மக்-களின் நம்பிக்கையை சீர்குலைப்பதாகும். இது கண்டனத்துக்குரி-யது. நீர்நிலையை யார் ஆக்கிரமித்தாலும் அகற்றப்படும்,'' என்றார்.இந்நிலையில் நேற்று கஞ்சநாயக்கன்பட்டியில், அ.தி.மு.க.,வின் புது உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. அதில் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது: ஆக்கிரமிப்பாளர், அ.தி.மு.க.,வை சேர்ந்தவர் என்ப-தற்காக அகற்ற வருகின்றனர். இதுபோன்ற செயல்களால், அ.தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது. அ.தி.மு.க.,வால் அடையாளம் காட்டப்பட்டவர் செல்வகணபதி. யாராக இருந்-தாலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என கூறுகிறார். கஞ்சநாயக்-கன்பட்டியில் ஊராட்சி தலைவர் உள்பட பல்வேறு, தி.மு.க.,வினர் ஆக்கிரமித்து பல வீடுகளை கட்டியுள்ளனர். பண்-ணப்பட்டியில் கோடிக்கணக்கான மதிப்பு நிலத்தை ஆக்கிரமித்-துள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகளை, செல்வகணபதியால் அகற்ற முடியுமா? அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., குறித்து பேச உங்களுக்கு தகுதி கிடையாது.இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளின் போட்டோக்களை காட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை