உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்

67ம் ஆண்டு விழாஇன்று பட்டிமன்றம்தாரமங்கலம் சன்மார்க்க சங்கத்தின், 67ம் ஆண்டு விழா, அங்குள்ள அதன் மண்டபத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. 3 நாள் நடக்கும் நிகழ்ச்சியில் முதல் நாளில் மாணவர்களுக்கு சிலம்பம், பேச்சுப்போட்டி நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கினர். நேற்று, 'நால்வர் காட்டிய நல்வழி' தலைப்பில், திலகவதி சண்முகசுந்தரம் பேசினார். இன்று மாலை, 5:00 மணிக்கு, 'குடும்பத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களா, பெண்களா' தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.பெண் மாயம்வாழப்பாடி அருகே குறிச்சியை சேர்ந்த சிவசக்தி மனைவி மணிமேகலை, 38. இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் காரிப்பட்டி அருகே அக்ரஹார நாட்டாமங்கலத்தில் உள்ள தந்தை ராஜேந்திரன், 63, வீட்டில் சில மாதங்களாக மணிமேகலை வசித்தார். கடந்த, 14ல் அவர் மாயமானார். இதுகுறித்து ராஜேந்திரன், நேற்று அளித்த புகார்படி, காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.மதுபாட்டில் விற்ற2 பெண்கள் கைதுஏற்காடு, பட்டிப்பாடி, வேலுாரை சேர்ந்த சின்னான் மனைவி சின்னம்மாள், 40. இவர் அரசின் டாஸ்மாக் கடையில் பாட்டில்களை வாங்கி கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்பதாக, ஏற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் நேற்று சின்னம்மாள் வீட்டில் சோதனை நடத்தியபோது, 20 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சின்னம்மாளை கைது செய்தனர். அதேபோல் அதே கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் மனைவி பாப்பு, 40, வீட்டில், 20 குவார்ட்டர் பட்டில்களை கைப்பற்றி, அவரையும் கைது செய்தனர்.விசைப்படகு பயணியர்துர்நாற்றத்தால் சிரமம்மேட்டூர் அணை பண்ணவாடி பரிசல் துறையில் இருந்து மறுகரையிலுள்ள தர்மபுரி மாவட்டம், நாகமறைக்கு விசைப்படகு இயக்கப்படுகிறது. அதில் இரு மாவட்ட பயணியர், மாணவ, மாணவியர், மக்கள் செல்கின்றனர். ஆனால், 2 மாதங்களாக அணை பண்ணவாடி கரையோர நீர்பரப்பு பகுதியில் தண்ணீர் பச்சை நிறத்தில் காட்சியளிப்பதோடு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அணை நீர்பரப்பு பகுதியில் நிறுத்தப்படும் விசைப்படகில் இருந்து பயணியர் இறங்கி துர்நாற்றம் வீசும் நீரில் நடந்து, கரைக்கு செல்லும் அவலம் நீடிக்கிறது. மேலும் விசைப்படகில் பயணிக்கும் பெரும்பாலானோர், துர்நாற்றத்தால் முகம் சுளிக்கின்றனர்.மத்திய ரிசர்வ் படைஏட்டு தற்கொலைமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணிபுரிந்த ஏட்டு, குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டார்.சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா ராமமூர்த்தி நகரை சேர்ந்த கோபால் மகன் சிலம்பரசன், 39. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ஏட்டாக இருந்த இவர், காஷ்மீரில் பணியாற்றி வந்தார். 29 நாட்கள் விடுமுறையில், கடந்த, 8ல் சொந்த ஊருக்கு வந்தார். இவரது மனைவி பார்வதி, 34. இவர்களுக்கு திருமணமாகி, 8 ஆண்டுகளாகிறது. ஆனால் குழந்தை இல்லை.இந்நிலையில் குடும்ப தகராறில் நேற்று மாலை, வீட்டு மாடியில் இருந்த மின் விசிறியில் சிலம்பரசன் துாக்கிட்டு கொண்டார். அவரை மீட்ட உறவினர்கள், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.மான் கொம்புதோல் பறிமுதல்சேலம் சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் குழுவினர், சேலம் மாவட்டம் பெருமாம்பட்டி கோவில் காட்டை சேர்ந்த விஜய் வீட்டில் சோதனை செய்தனர். அவரது வீட்டில் மானின் கால்கள், கொம்பு, தோல் ஆகியவை இருந்ததால், பறிமுதல் செய்தனர்.இதையடுத்து தலைமறைவாக உள்ள விஜயை, வனத்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் விஜய் வீட்டின் முன் உள்ள தோட்டத்தில் எடுக்கப்பட்ட நாட்டுத்துப்பாக்கி, இரும்பாலை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.வேட்டி - சேலை குறைப்புரேஷன் நுகர்வோர் அதிருப்திசேலம் மாவட்டத்தில், 1,715 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வினியோகம் கடந்த, 10ல் தொடங்கியது. 10,72,321 ரேஷன் கார்டுகளில், 14 வரை, 10,28,065 கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளன. இது, 95.9 சதவீதம். இருந்தும் நுகர்வோர் பலருக்கு இலவச வேட்டி -சேலை வழங்கப்படவில்லை என, அதிருப்தி தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து ரேஷன் விற்பனையாளர்கள் கூறுகையில், 'ஒவ்வொரு கடைக்கும், 70 சதவீதமாக குறைத்து இலவச வேட்டி - சேலை வினியோகிக்கப்பட்டுள்ளது. இதனால் அரிசி பெறும் நுகர்வோர் பலருக்கும் இம்முறை வேட்டி - சேலை வழங்க முடியாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, வி.ஏ.ஓ.,விடம் முறையிட்டால், 'வந்தால் தருகிறோம்' என கூறி சமாளியுங்கள் என தெரிவித்தனர். அதன்படி நுகர்வோரிடம் தெரிவித்து விடுபட்டுள்ளோம்' என்றனர்.இதுகுறித்து கலெக்டர் கார்மேகம் கூறுகையில், ''அரிசி பெறும் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து நுகர்வோர், கைவினைஞர்கள், மீனவர்கள், நிலமற்ற விவசாய கூலிகள் போன்ற தகுதி உடையவர்களுக்கு மட்டும் இலவச வேட்டி- சேலை கிடைக்கும்,'' என்றார்.அணை பூங்கா14,000 பேர் ரசிப்புபொங்கல் பண்டிகையால், மேட்டூர் அணை பூங்காவுக்கு சுற்றுலா பயணியர் எண்ணிக்கை, இரு நாட்களாக அதிகரித்தது. அதன்படி நேற்று முன்தினம், 5,488 பேர், நேற்று, 8,726 பேர் என, 2 நாட்களில், 14,214 பேர் பூங்காவை ரசித்தனர்.இதன்மூலம் நுழைவு கட்டணமாக, 5 வீதம், 71,070 ரூபாய் வசூலானது. இதுதவிர இரு நாட்களில் பவளவிழா கோபுரத்துக்கு சென்று, 1,958 பேர் அணையை பார்வையிட்டனர். இதன்மூலம், 9,790 ரூபாய் வசூலானது.தி.மு.க., மத்திய மாவட்டம்பொங்கல் கொண்டாட்டம்தி.மு.க., மத்திய மாவட்டம் அயலக அணி பிரிவு சார்பில் ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலர் ரமேஷ் தலைமை வகித்தார். அதில், சேலம் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மக்கள், கட்சியினர், வியாபாரிகள், பயணியருக்கு, பொங்கல், கரும்பு வழங்கினார். இதில் உதயநிதி நற்பணி மன்றம் மாநில பொதுச்செயலர் பாபு, மாவட்ட கவுன்சிலர்கள் சண்முகம், அழகிரி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் குப்புசாமி, ஓமலுார் டவுன் பஞ்சாயத்து தலைவி செல்வராணி, பேரூர் செயலர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை