உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பேட்ஜ் ஒர்க் வேண்டாம்; புது சாலை போடுங்க... பணியை தடுத்து நிறுத்தி மக்கள் வலியுறுத்தல்

பேட்ஜ் ஒர்க் வேண்டாம்; புது சாலை போடுங்க... பணியை தடுத்து நிறுத்தி மக்கள் வலியுறுத்தல்

மேட்டூர்,கொளத்துார், ஆலமரத்துப்பட்டி ஊராட்சி குரும்பனுாரில் இருந்து புலியூர் பிரிவு சாலை, 2.7 கி.மீ., மற்றும் குரும்பனுாரில் இருந்து சவேரியார்பாளையம் வரை, 2 கி.மீ., ஆகும். அதற்கான தார்ச்சாலைகள் அமைத்து, 10 ஆண்டுகள் ஆனதால் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தார்க்காடு சாலையில் புலியூர் பிரிவில் இருந்து குரும்பனுார் வரை, பள்ளங்களை சீரமைக்க, பொக்லைன் மூலம், 'பேட்ஜ் ஒர்க்' பணி நேற்று நடந்தது.மதியம், குரும்பனுார் கிராம மக்கள், புலியூர் பிரிவு பகுதியில் பொக்லைன் மூலம் நடந்த பணியை தடுத்து நிறுத்திவிட்டனர்.தொடர்ந்து, கொளத்துார் ஒன்றிய அலுவலகம் சென்று, கமிஷனர் அண்ணாதுரையிடம் மனு கொடுத்தனர். அதில், 'பேட்ஜ் ஒர்க் செய்வதற்கு பதில் புதிதாக சாலைகள் அமைக்க வேண்டும்' என கூறியிருந்தனர்.இதுகுறித்து அண்ணாதுரை கூறுகையில், ''தார்ச்சாலை புதிதாக அமைக்க, ஒரு சாலைக்கு, 94 லட்சம் ரூபாய், மற்றொரு சாலைக்கு, 74 லட்சம் ரூபாய் செலவாகும். மக்கள் கொடுத்த மனுவை அடுத்து, தார்ச்சாலை அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்