| ADDED : நவ 21, 2025 02:04 AM
கெங்கவல்லி, கெங்கவல்லி, தெற்கு காட்டை சேர்ந்த ராகுல்காந்தி மனைவி வசந்தபிரியா, 27. நிறைமாத கர்ப்பிணியான இவர் நேற்று, மதியம், 1:00 மணிக்கு கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்து அலுவலகம் சென்றார். அங்கு வசந்தபிரியா, செயல் அலுவலர் ஜனார்த்தனனிடம், 'எங்கள் பட்டா நிலம் வழியே குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு குழாய் அமைக்க வேண்டாம் என, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் மனு அளித்திருந்தேன். எதற்காக குழாய் அமைத்துள்ளீர்கள்' என கேட்டு, நின்றபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.இதுகுறித்து ஜனார்த்தனன் கூறுகையில், ''கவுன்சிலர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான அடிப்படையில், குழாய் அமைக்கப்பட்டுள்ளது. வசந்தபிரியா புகார் குறித்து விசாரிக்கப்படும். கர்ப்பிணியாக இருந்ததால், அவரை அமரும்படி கூறினேன். அவர் நின்றபடி பேசினார். அவரது கணவர் தான் வீடியோ எடுத்து பரவவிட்டுள்ளார்,'' என்றார்.