உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓட்டு எண்ணும் மையத்தில் சிறப்பு எஸ்.ஐ., மயக்கம்

ஓட்டு எண்ணும் மையத்தில் சிறப்பு எஸ்.ஐ., மயக்கம்

சேலம் : சேலம் லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி, கருப்பூர் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நேற்று காலை, 8:00 மணிக்கு தொடங்கி நடந்தது. பாதுகாப்பு பணியில், 1,500 போலீசார் ஈடுபட்டனர். அதில் சேலம் மாநகர் சிறார் குற்ற தடுப்பு பிரிவு சிறப்பு எஸ்.ஐ., சங்கர், 57, பிரதான நுழைவாயில் பகுதியில் பணியில் இருந்தார். காலை, 10:30 மணிக்கு அவர் மயங்கி விழுந்தார். அவருக்கு தேர்தல் பணி சிறப்பு மருத்துவ குழுவினர், முதலுதவி செய்தனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், 'நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு மருந்து, மாத்திரை உட்கொள்ளும் அவர், நுழைவாயிலில் நீண்ட நேரம் நின்றபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு, சரிவர உறக்கமின்றி சோர்ந்து காணப்பட்டார். இதில் மயக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஆரோக்கியமாக உள்ளார்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை