உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறை இ.பி.எஸ்., ஏன் தலையிடவில்லை

ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறை இ.பி.எஸ்., ஏன் தலையிடவில்லை

சேலம், ''ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறை அமைக்கப்பட உள்ள விவகாரத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., ஏன் தலையிடவில்லை,'' என, த.வா.க., தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தில், ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. அங்கு ஏராளமான சாயப்பட்டறைகள் அமைக்க உள்ளதாக புகார் எழுந்ததால், அப்பகுதி மக்களிடம், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நேற்று கருத்துகளை கேட்டறிந்தார்.தொடர்ந்து அவர் பேசியதாவது: ஜாகீர் அம்மாபாளையம், டால்மியா போர்டு பகுதியில் துாய்மையான நீர் கிடைக்கிறது என்பதை, நீங்கள் பேசியதன் மூலம் அறிந்தேன். இங்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் டால்மியா நிறுவனம் வெட்டி எடுத்து பணம் சம்பாதித்து வருகிறது. மேக்னசைட், தாதுப்பொருட்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. அதை, தனியார் நிறுவனங்கள் வெட்டி எடுத்து விற்று வருகின்றனர். நீர் நிலை பகுதியை அழிக்க எப்படி அனுமதி வழங்க முடியும். அதிகாரிகள் எப்படி அனுமதி வழங்கினர். 17 ஏக்கர் ஏரியை, மண் நிரப்பி அழிக்கின்றனர். இந்த விவகாரத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., ஏன் தலையிடவில்லை. அவர், போராட்ட களத்தில் நிற்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் குரல் கொடுப்பேன். சாயப்பட்டறை பாதிப்பு குறித்து, முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை