உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / யோகி ராம்சுரத்குமாரின் 107வது ஜெயந்தி விழா

யோகி ராம்சுரத்குமாரின் 107வது ஜெயந்தி விழா

சேலம் :பகவான் யோகி ராம்சுரத்குமாரின், 107வது ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி வழிபட்டனர்.சேலம் அழகாபுரம் பெரியபுதுார் குமரன் நகரில், பகவான் யோகி ராம்சுரத்குமார் கோவில் உள்ளது. 107வது ஜெயந்தி விழாவையொட்டி நேற்று காலை, 6:00 மணிக்கு யோகி ராம்சுரத்குமாரின் சிலைக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்து சர்வ அலங்காரத்துடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது.பின்னர், பக்தர்களின் பஜனை பாடல்களுடன் பாதபூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து பேராசிரியர் கருணாகரன், கவிஞர் முருககுமரன் ஆகியோரின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. மாலையில் அக்ஷரா சங்கீத கலா ேஷத்ரா பள்ளி மாணவர்களின் பாட்டு, நடனம் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 8:00 மணிக்கு மங்கல ஆரத்தியுடன் ஜெயந்தி விழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி