உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடி அருகே‛ கள் விற்பனை வயல்களை சேதப்படுத்துவதால் வேதனை

இளையான்குடி அருகே‛ கள் விற்பனை வயல்களை சேதப்படுத்துவதால் வேதனை

இளையான்குடி: இளையான்குடி அரண்மனை கரை அருகே சோலையூரணி பகுதியில் சட்டவிரோதமாக கள் விற்பனை செய்யப்படுகிறது. அருந்த வருபவர்கள் வயல்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரண்மனைக் கரை ஊராட்சிக்குட்பட்ட சோலையூரணி மற்றும் அரண்மனைக் கரை,துகவூர் கண்மாய்களில் நுாற்றுக்கணக்கான பனை மரங்கள் உள்ளன.பனை மர உரிமையாளர்கள் சிலர் தற்போது பனை மரத்திலிருந்து கள் இறக்கி சட்ட விரோதமாக விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.அதனை குடிக்க வருபவர்கள் தற்போது வயல்களில் மிளகாய், பருத்தி சாகுபடி செய்துள்ள நிலையில் அதனை சேதப்படுத்தி வருவதாக கூறி விவசாயிகள் வேதனை படுகின்றனர்.சோலையூரணி விவசாயி குழந்தைச்சாமி கூறுகையில், கள் அருந்த வருபவர்கள் வயல்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றனர். வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக போடப்பட்டுள்ள டியூப்களையும் வெட்டி செல்கின்றனர்.இதனால் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இளையான்குடி போலீசார் சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை