உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சேங்கை ஊரணியில் சேதமாகும் பண்டை கால பொருட்கள்

சேங்கை ஊரணியில் சேதமாகும் பண்டை கால பொருட்கள்

திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி சேங்கை ஊரணியில் இயந்திரங்களை கொண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் பண்டைய கால பொருட்கள் சேதமடைவதாக குற்றம் சாட்டுகின்றனர்.திருப்பாச்சேத்தி அய்யனார் கோயில் எதிரே வடக்கு கண்மாயை ஒட்டி இருந்த சேங்கை ஊரணியை பலரும் ஆக்கிரமித்து விவசாயம் செய்திருந்தனர். நீதிமன்ற உத்தரவையடுத்து மீட்கப்பட்ட சேங்கை ஊரணியில் வேலை உறுதி திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. தூர்வாரும் பணியின் போது சுடுமண் உறைகிணறு, முதுமக்கள் தாழி, பானை ஓடுகள் கிடைத்தன. கடந்த இரு நாட்களாக சேங்கை ஊரணியில் இயந்திரம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் பண்டைய கால பொருட்கள் மேலும் சேதமடையும். எனவே வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மூலம் துார்வார வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, வேலை உறுதி திட்ட பணிகள் மூலமே துார்வாரும் பணி நடக்கிறது. கரை அமைக்கும் பணிகள் மட்டுமே இயந்திரம் மூலம் நடக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றியதால், பாதிக்கப்பட்டவர்கள் தேவையற்ற புகார்களை கிளப்புகின்றனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை