உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசின் புதிய சலுகை காரைக்குடிக்கு மாநகராட்சி அந்தஸ்து: வரி உயர்வு இருந்தாலும், வளர்ச்சிகளும் உயரும்   

அரசின் புதிய சலுகை காரைக்குடிக்கு மாநகராட்சி அந்தஸ்து: வரி உயர்வு இருந்தாலும், வளர்ச்சிகளும் உயரும்   

சிவகங்கை-தமிழக அரசு மாநகராட்சி அந்தஸ்து வழங்குவதற்கான விதிமுறைகளில் சில தளர்வுகளை அறிவித்ததால், காரைக்குடிக்கு மாநகராட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. இதன் மூலம் வரிகள் உயர்ந்தாலும், வளர்ச்சிகளும் உயரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில், சுற்றுலா தலம், பழங்கால கட்டடங்கள் நிறைந்த புராதான தலம், கல்வி நகரம், அறுசுவைக்கு பெயர் பெற்ற நகரம் காரைக்குடி. இந்நகராட்சியின் கீழ் 36 வார்டுகள் உள்ளன. இதில், 1.50 லட்சம் பேர் வசிக்கின்றனர். கல்வி கற்கவும், தொழில் செய்ய ஏற்ற நகரம் என்பதால், அதிகளவில் இங்கு குடியேறி வருகின்றனர். காரைக்குடி நகரை ஒட்டியுள்ள ஊராட்சிகள் அபரிமித வளர்ச்சியை பெற்று வருகின்றன. இந்த சூழலில் தான் காரைக்குடியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என மக்களிடம் இருந்து கோரிக்கைகள் அதிகரித்து வந்தன. ஒரு நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த ஆண்டு வருமானம் ரூ.30 கோடியும், மக்கள் தொகை 5 லட்சம் வரை இருக்க வேண்டும். இந்த விதிப்படி காரைக்குடிக்கு மாநகராட்சி அந்தஸ்து கிடைக்க இன்னும் பல ஆண்டுகளாகும் என்ற நிலை உருவானது. * காரைக்குடிக்கு மாநகராட்சி அந்தஸ்து: இதை தவிர்த்து, சட்டசபையில் உரிய சட்ட திருத்தம் கொண்டு வந்தனர். அதன்படி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த ஆண்டு வருமானம் ரூ.20 கோடி, மக்கள் தொகை 2 லட்சம் வரை இருந்தால் போதும் என தெரிவித்தனர். இப்புதிய திருத்த சட்டப்படி காரைக்குடிக்கு மாநகராட்சி அந்தஸ்து பெறுவதற்கான வாய்ப்பை அரசு பெற்று தந்துள்ளது. மாவட்டத்தில் முதல் மாநகராட்சியாக காரைக்குடியை அரசு அறிவித்துள்ளது. மக்கள் தொகை, வருவாயை அதிகரிக்க செய்யும் நோக்கில், காரைக்குடிக்கு அருகில் உள்ள கோட்டையூர், கண்டனுார் பேரூராட்சிகள், சங்கராபுரம், அரியக்குடி, இலுப்பக்குடி, கோவிலுார், தளக்காவூர் ஆகிய 5 ஊராட்சிகளை காரைக்குடியுடன் இணைத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தியுள்ளனர். * வார்டுகள் 100 ஆக அதிகரிக்கப்படும்: காரைக்குடிக்கு மாநகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டதால், விரைவில் ஐ.ஏ.எஸ்., நிலையிலான அதிகாரியை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட உள்ளனர். குறிப்பாக மாவட்ட வருவாய் அலுவலரில் இருந்து ஐ.ஏ.எஸ்.,ஆக பதவி உயர்வு பெற்ற 7 பேர்களில் ஒருவரை விரைவில் அரசு காரைக்குடி மாநகராட்சி கமிஷனராக நியமிக்க உள்ளது. அக்கமிஷனர் மூலமே இணைக்கப்பட்ட பேரூராட்சி, ஊராட்சிகளின் எல்கையை வரையறை செய்து, வார்டுகளின் எண்ணிக்கையை 100 ஆக அதிகரிக்கும் முயற்சிகளில் அரசு இறங்க உள்ளது. அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் முதற்கட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள் தேர்தல் காரைக்குடியில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். அதே நேரம் வரியும் உயரும், வளர்ச்சியும் உயரும் என்ற எதிர்பார்ப்பில் மாநகராட்சி அந்தஸ்தில் காரைக்குடி காட்சி அளிக்கிறது. ///


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்