உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பராமரிப்பில்லாத தேவகோட்டை தியாகிகள் பூங்கா; ↓ஆக்கிரமிப்புகளால் மறையுது வரலாற்று சின்னம்

பராமரிப்பில்லாத தேவகோட்டை தியாகிகள் பூங்கா; ↓ஆக்கிரமிப்புகளால் மறையுது வரலாற்று சின்னம்

தேவகோட்டை நகரின் மையப்பகுதியில் 1925ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டதுஇந்த பூங்கா. 1942ல் ஜாலியன் வாலாபாக் படுகொலையை போல் தேவகோட்டையிலும் இந்த இடத்தில் ஆங்கிலேய போலீசார் துப்பாக்கி சூட்டில் பல உயிர்களை கொன்று குவித்தனர். இச்சம்பவத்தின் நினைவாக இந்த பூங்காவில் தியாகிகள் நினைவு ஸ்துாபி அமைக்கப்பட்டுஉள்ளது. அன்று முதல் இந்த பூங்கா தியாகிகள் பூங்கா என அழைக்கப்பட்டு வருகிறது.இந்த வரலாற்று சின்னமான தியாகிகள் பூங்காவில் மரங்கள் அதிகளவில் இருந்ததால் எந்த நேரமும் நகர் மக்கள் மட்டுமின்றி கிராமத்தினரும் இங்கு வந்து ஓய்வு எடுத்தனர். இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. வரலாறு கூறும் இந்த தியாகிகள் பூங்கா சுகாதார சீர்கேட்டில், கொசு மையமாக மாறிவிட்டது. நகராட்சியில் புதிதாக பொறுப்பேற்கும் மக்கள்பிரதிநிதிகள் அவ்வப்போது பல லட்சங்களில் புதுப்பிக்கிறார்கள். ஆனால் ஒரு நாள் கூட பராமரிப்பதில்லை. ஆக்கிரமிப்பில் பூங்கா: இந்த பூங்காவை சுற்றி ஆக்கிரமிப்பு அதிகரித்து பூங்கா இருப்பதையே மறைத்து விட்டனர். போக்குவரத்து நெரிசலில் பாதசாரிகள் சிரமப்படுகின்றனர்.ஆக்கிரமிப்பை அகற்றுவதில் போலீசார் கையை பிசைந்து நிற்கின்றனர். பூங்காவை தினமும் காலை மாலை சுத்தம் செய்து, கொசு மருந்து அடிக்க வேண்டும். பூங்காவில் ஏராளமான குழாய்கள் இருப்பதால் பூங்காவில் தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும். சி.சி.டிவி கேமரா அமைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க வேண்டும். மூன்று புறமும் ஆக்கிரமிப்பை அகற்றுவதோடு ஏற்கனவே இருந்தது போல் ஒரு வழிப்பாதையாக அமல்படுத்த வேண்டும். பூங்காவை சுற்றி சிமென்ட் கற்களால் நடை பாதை அமைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை