உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தானாவயல் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பு; கலெக்டரிடம் மக்கள் புகார்

தானாவயல் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பு; கலெக்டரிடம் மக்கள் புகார்

சிவகங்கை : தேவகோட்டை ஒன்றியம், தானாவயல் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் இல்லை என கலெக்டர் அலுவலகத்தில் கிராமத்தினர் புகார் அளித்தனர். இந்த ஒன்றியத்தில் உள்ள தானாவயல் ஊராட்சியின் கீழ் இந்திரா நகர் உள்ளது. இங்கு 2007ம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினர். அதில் பலர் வீடுகள் கட்டி குடியேறினர்.இங்கு வீடு கட்டிய மக்களுக்கு ஊராட்சி சார்பில் வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது. மக்களும் ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.இந்நிலையில், கடந்த 1 மாதமாக தானாவயல் ஊராட்சி இந்திரா நகரில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால், இந்திரா நகர் மக்கள் விலை கொடுத்தும், அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். எனவே தானாவயல் ஊராட்சி நிர்வாகம், இந்திரா நகர் மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கிராமத்தினர் புகார் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை