உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனம் தாலுகா அலுவலகத்திற்கு திருப்பாச்சேத்தியில் இருந்து மின் சப்ளை

திருப்புவனம் தாலுகா அலுவலகத்திற்கு திருப்பாச்சேத்தியில் இருந்து மின் சப்ளை

திருப்புவனம் : திருப்புவனம் தாலுகா அலுவலகத்திற்கு திருப்பாச்சேத்தியில் இருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டிருப்பதால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பணி பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்புவனம் கடந்த 2013ல் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு தனியார் கட்டடத்தில் அலுவலகம் செயல்பட தொடங்கியது. தாலுகா அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் திருப்புவனம் புதுார் அருகே கட்டப்பட்டு கடந்த 2015ல் திறக்கப்பட்டது. வட்ட வழங்கல் அலுவலகம், தேர்தல் பிரிவு, நில அளவை பிரிவு, சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு, ஆதார் பதிவு, இணையதள பிரிவு என பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். திருப்புவனத்தைச் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமமக்கள் முதியோர் ஓய்வூதியம், புதிய ரேஷன் கார்டு, நிலம் அளவீடு செய்ய, ஆதார் பதிவு, திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். திருப்புவனத்தில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு 10 கி.மீ., துாரத்தில் உள்ள திருப்பாச்சேத்தி துணை மின் நிலையத்தில் இருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வயல்கள் வழியாக மின் கம்பிகள் செல்வதால் அடிக்கடி மின்வெட்டு நிகழ்கிறது. மேலும் குறைந்த மின்னழுத்தம் காரணமாக கம்ப்யூட்டர் உள்ளிட்டவைகளை பயன்படுத்த முடியவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டால் திருப்பாச்சேத்தி மின்வாரியத்தில் இருந்து பழுது சரிசெய்ய தாமதமாகிறது. தாலுகா அலுவலகத்திற்கு திருப்புவனத்தில் இருந்து மின் இணைப்பு வழங்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை