உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் மழையால் நிரம்பும் நீர்நிலைகள்

மானாமதுரையில் மழையால் நிரம்பும் நீர்நிலைகள்

மானாமதுரை: மானாமதுரையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து நீர் நிலைகளுக்கு தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் கோடை விவசாயம் செய்த விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு போதுமான தண்ணீர் இல்லாமல் கவலையில் இருந்தனர்.இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து இரவில் மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: மானாமதுரையில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் அடித்ததால் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டோம்.தற்போது மழை பெய்து நீர் நிலைகள் நீர் நிரம்பி வருவதினாலும், கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதினாலும் விவசாயத்திற்கு ஏற்றதாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி