உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருக்கோஷ்டியூர் ஊரணி சீரமைக்க கோரிக்கை

திருக்கோஷ்டியூர் ஊரணி சீரமைக்க கோரிக்கை

திருக்கோஷ்டியூர்: - திருப்புத்துார் ஒன்றியம் திருக்கோஷ்டியூரில் சேங்கை ஊரணிக்கான வரத்துக்கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.திருக்கோஷ்டியூரில் மேல்நிலைப்பள்ளி, அய்யனார் கோயில் அருகே சேங்கை ஊரணி உள்ளது. முன்பு பொதுமக்களால் குடிநீர் ஊரணியாக பயன்படுத்தப்பட்டது. தற்போது நீர்வரத்தில்லாமல் பயன்பாடு இல்லாமல் உள்ளது. இந்த ஊரணியில் 2022 ல் ரூ.9.95 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் நடந்துள்ளன.கரைகள் சேதமடைந்து, போதிய சுற்றுச் சுவரின்றி காணப்படுகிறது. நகரின் கழிவுநீர், மழைநீருடன் சேர்ந்து வடிந்து ஊரணி சுகாதாரக் கேடாக உள்ளது. மக்கள் பயன்பாடின்றி உள்ள இந்த ஊரணிக்கு மீண்டும் நீர்வரத்து ஏற்படுத்த சோலுடையான்பட்டி இரட்டைக் கண்மாயிலிருந்து வரத்துக் கால்வாய் சீரமைக்கவும், கரைகளை பலப்படுத்தி, சுற்றுச்சுவர் எழுப்பவும், நடைபாதை அமைக்கவும், முள்வேலியிட்டு படித்துறை கட்டவும் அப்பகுதியினர் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை