உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காளையார்கோவில் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடம் அமையுமா

காளையார்கோவில் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடம் அமையுமா

சிவகங்கை : காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனை கூடம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காளையார்கோவிலில் அரசு மருத்துவமனை மதுரை - தொண்டி தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு தினசரி 100க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். 24 மணி நேரமும் மருத்துவர்கள் தங்கி சிகிச்சை அளித்து வருகின்றனர்.தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தபட்டதில் இருந்து இங்கு மகப்பேறு, பொதுமருத்துவம் 24 மணி நேரமும் பார்க்கப்படுகிறது. புறநோயாளிகள் பிரிவு, எக்ஸ்ரே அறை, பல் மருத்துவ பிரிவு உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையில் பிரதே பரிசோதனை கூடம் மற்றும் பிணவறை அமைக்கப்படாமல் இருப்பது குறையாக உள்ளது.காளையார்கோவிலை சுற்றியுள்ள பகுதியில் யாராவது விபத்தில் இறந்தாலோ அல்லது தற்கொலை செய்து கொண்டாலோ அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டிய சூழல் உள்ளது.இதனால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை