உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிறாவயலில் ஜன.17ல் மஞ்சுவிரட்டு  6 இடத்தில் நடத்த அனுமதி

சிறாவயலில் ஜன.17ல் மஞ்சுவிரட்டு  6 இடத்தில் நடத்த அனுமதி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் இந்த மாதம் மஞ்சுவிரட்டு நடத்துவதற்காக அரசிதழில் வெளியிடக்கோரி அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.மாவட்டத்தில் ஜன.,17ல் சிறாவயல், ஜன..19 ல் கண்டுபட்டி, ஜன., 27 ல் சின்னகுன்றக்குடி, ஜன.,30 ல் கல்லல் அருகே தேவபட்டு ஆகிய இடங்களில் மஞ்சுவிரட்டும், ஜன., 21ல் திருப்புத்துார் அருகே சுள்ளாம்பட்டி, ஜன., 29ல் தேவகோட்டை அருகே கொடிக்குளம் ஆகிய இடங்களில் வடமஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி விழாக்குழுவினர் கலெக்டர் ஆஷா அஜித்திடம் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பத்துடன் விழாக்குழு உத்திரவாத பத்திரம், காப்பீடு தொகை, தல ஆய்வறிக்கையை கலெக்டர் அரசின் பார்வைக்கு அனுப்பியுள்ளனர். சிவகங்கையில் முதற்கட்டமாக ஜன., முழுவதும் அனுமதி பெற்று நடக்க உள்ள மஞ்சுவிரட்டு, வடமஞ்சுவிரட்டு இடங்கள் குறித்த விபரம் அரசிதழில் வெளியிட்ட உடன், விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கால்நடை, பொதுப்பணித்துறையினர் மேற்கொள்ள உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை