உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்களுக்கான ஓவிய போட்டி

மாணவர்களுக்கான ஓவிய போட்டி

சிவகங்கை : சிவகங்கை கேந்திர வித்யாலயா பள்ளியில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசை நினைவு கூறும் வகையில் மாணவர்களுக்கான ஓவிய போட்டி நடந்தது.பள்ளி முதல்வர் குருசாமி பாண்டியன் தலைமை வகித்தார். 10 பள்ளிகளை சேர்ந்த 100 மாணவர்கள் ஓவியம் வரைந்தனர். பிரதமர் நரேந்திர மோடி மாணவர்கள் எதிர்காலத்தில் தேர்வை எதிர்கொள்வது எப்படி என 13 மொழிகளில் புத்தகம் வெளியிட்டுள்ளார். இந்த புத்தகம் ஓவிய போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. போட்டி நடுவர்களாக ராஜா துரைசிங்கம் மன்னர் கலைக்கல்லுாரி வரலாற்று துறை பேராசிரியர்கள் கண்ணன், மைக்கேல், கே.ஆர்.பள்ளி ஆசிரியர் ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை