| ADDED : ஜன 30, 2024 11:38 PM
திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி ரயில் நிலைய நடைமேடையில் கூரை இல்லாததால் பயணிகள் வெயிலிலும் மழையிலும் நனைந்து கொண்டே ரயிலில் ஏறி இறங்கி செல்கின்றனர். மதுரை- ராமேஸ்வரம் ரயில் பாதையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட இடங்களில் பயணிகள் ரயில் நின்று செல்லும், காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் தலா இரு மார்க்கங்களிலும் பயணிகள் ரயில் சென்று வருகிறது.திருப்பாச்சேத்தியைச் சுற்றியுள்ள மாரநாடு, தஞ்சாக்கூர், கானுார், கல்லுாரணி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மதுரை, ராமேஸ்வரம், ராமநாதபுரம் செல்ல திருப்பாச்சேத்தி வந்து செல்கின்றனர்.இதுதவிர திருப்பாச்சேத்தியை சுற்றிலும் காய்கறிகள் விளைவிக்கப்பட்டு ரயில் மூலம் பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.தினசரி ஏராளமான பயணிகள் திருப்பாச்சேத்தியில் நின்று ரயில் ஏறி, இறங்கி சென்று வரும் நிலையில் நடைமேடையில் கூரை இல்லாததால் பயணிகள் வெயிலிலும் மழையிலும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மேற்கூரை வசதி உள்ள நிலையில் திருப்பாச்சேத்தியில் மட்டும் கூரை இல்லாதது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தென்னக ரயில்வே நிர்வாகம் திருப்பாச்சேத்தி ரயில் நிலையத்தில் கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.