உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மலைக்கோயிலில் சஷ்டி பூஜை

மலைக்கோயிலில் சஷ்டி பூஜை

தேவகோட்டை: மார்கழி சஷ்டியை முன்னிட்டு தண்டாயுதபாணி மலைக்கோயிலில் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ராஜ அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்தனர்.ராம்நகர் பாலமுருகன் கோயிலில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர். இதனைத் தொடர்ந்து விசேஷ பூஜைகள் நடந்தன.நித்திய கல்யாணிபுரம் சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள முத்துராமசாமிக்கு சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ