உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நகரத்தாரின் செவ்வாய் பொங்கல் விழா கோலாகலம்

நகரத்தாரின் செவ்வாய் பொங்கல் விழா கோலாகலம்

சிவகங்கை:ஆண்டுதோறும் தை பிறந்து, மாட்டு பொங்கலுக்கு அடுத்து வரும் செவ்வாயன்று நகரத்தார்கள் சார்பில், செவ்வாய் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். சிவகங்கை மாவட்டம், பாகனேரி மற்றும் நாட்டரசன்கோட்டையில் நேற்று செவ்வாய் பொங்கல் விழா நடைபெற்றது.பாகனேரி புல்வநாயகி அம்மன் கோவில் முன், 506 பானைகளில் நகரத்தார் வெண் பொங்கல் வைத்தனர். அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளில் வசிக்கும் நகரத்தார் ஒன்று கூடினர். 506 புள்ளிகளின் குடும்ப தலைவர் பெயர்களை எழுதி போட்டு ஆடிபூச மடத்தில் ஓலை கொட்டானில் குடவோலை முறையில் குலுக்கி எடுத்தனர்.இதில், முதல் பெயர் வந்த வயிரவன்கோவில் பி.என்., சுந்தரம் குடும்பத்தினர் பொங்கல் வைத்தனர். காரியதரிசி, ஏ.என்.சுப்பிரமணியன் தலைமையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை