மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
7 hour(s) ago
பயிற்சி முகாம்
7 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
7 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
7 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
7 hour(s) ago
திருப்புத்துார்; திருப்புத்துாரிலிருந்து மதுரை செல்லும் ரோட்டில் கோட்டையிருப்பு பஸ் நிறுத்தம் அருகில் டூ வீலர் மீது சரக்கு வேன் மோதியதில் 3 பேர் காயமடைந்தனர்.திருப்புத்துார் ஒன்றியம் சுண்ணாம்பிருப்பு வி.ஏ.ஓ. வாக பணி புரிபவர் முனீஸ்குமார். இவர் நேற்று காலை சுண்ணாம்பிருப்பிலிருந்து திருப்புத்துாருக்கு டூ வீலரில் வந்தார். அப்போது எதிரே திருப்புத்துாரிலிருந்து மதுரைக்கு சென்ற சரக்கு வேன் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் இருந்த தடுப்புக்கம்பி,விளக்குத் துாண் மீது மோதியது. தொடர்ந்து முனீஸ்குமார் வந்த டூ வீலர் மீதும் மோதியது. அதில் முனீஸ்குமார் படுகாயம் அடைந்தார். வேனில் வந்த ஓட்டுனர் மற்றும் உதவியாளர் இருவரும் காயமடைந்தனர். 3 பேரும் திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago