மேலும் செய்திகள்
போலீஸ் எனக்கூறி ரூ.44.59 லட்சம் பறிப்பு
11-Dec-2025
அரசு பள்ளியில் மோதல் மாணவர் மண்டை உடைப்பு
06-Dec-2025
சிறுமி உடலை தோண்டி எடுத்தது மந்திரவாதியா?
05-Dec-2025
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆயிகுளத்தில் நேற்று, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், கையில் தேசியக்கொடியை ஏந்தி, குடந்தை வட்டத்தலைவர் ஆதிகலியபெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.பின், அந்த அமைப்பின் செயலர் சுவாமிமலை விமல்நாதன் நிருபர்களிடம் கூறியதாவது:காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் உள்ளிட்ட 36 ஆறுகளில் தண்ணீர் சென்றாலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு சொட்டு தண்ணீர் கூட இதுவரை எட்டி பார்க்கவில்லை. அந்த அளவுக்கு, அவை ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன.கும்பகோணம் மாநகர எல்லைக்கு உட்பட்ட சூரியபுஷ்கரணி, சந்திரபுஷ்கரணி, ஆயி குளம், குயவர் குளம், மல்லாங்குளம், மேலக்காவேரி பள்ளிவாசல் தெற்கு குளம், வடக்கு குளம், எள்ளுக்குட்டை குளம் உள்ளிட்ட அனைத்து புனித குளங்களும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன.அந்த குளங்களுக்கு தண்ணீர் செல்லும் நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, நீதிமன்றங்கள், 2018ம் ஆண்டில் உத்தரவிட்டும், இதுவரைஅகற்றப்படவில்லை. எனவே, தண்ணீர் வராத குளங்கள், குட்டைகள், ஏரிகளில் உடனடியாக தண்ணீர் நிரப்பி, நிலத்தடி நீர் செறிவூட்டப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
11-Dec-2025
06-Dec-2025
05-Dec-2025