உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஈஸ்வரன் கோயிலில் 1008 விளக்கு பூஜை

ஈஸ்வரன் கோயிலில் 1008 விளக்கு பூஜை

கூடலுார்: கூடலுார் தாமரைக் குளத்தில் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான ஆன்மீக நாதர் ஈஸ்வரன் கோயில் உள்ளது. சேதமடைந்த திருக்கோயிலை சீரமைக்க தொடர்ந்து பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இருந்தபோதிலும் கோயிலில் சிறப்பு பூஜை, விளக்கு பூஜை, அன்னதானம் என தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று மக்கள் வளம்பெற கோயில் வளாகத்தில் 1008 குபேர விளக்கு பூஜை நடந்தது.முன்னதாக அன்னதானம், திருமுறை பாராயணம், ஆன்மீக சொற்பொழிவு, வாஸ்து ஹோமம், கைலாய வாத்தியம் நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பெண்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை ஈஸ்வரன் கோயில் வார வழிபாட்டு குழு, வான்மீக நாதர் ஈஸ்வரன் கோயில் திருப்பணி அறக்கட்டளை, தர்ம விழிப்புணர்வு இயக்கம், அனைத்து சமுதாய பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ