உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரோட்டோரத்தில் எரிக்கப்படும் குப்பையால் மாசுபடும் சுற்றுச்சூழல்; கண்டுகொள்ளாத மாசுகட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள்

ரோட்டோரத்தில் எரிக்கப்படும் குப்பையால் மாசுபடும் சுற்றுச்சூழல்; கண்டுகொள்ளாத மாசுகட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள்

தேனி : திண்டுக்கல் - குமுளி நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பை தொடர்ந்து எரிக்கப்படுவதால் அதிலிருந்து எழும் புகை மண்டலத்தால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் எழுந்துள்ளது.திண்டுக்கலில் இருந்து குமுளிக்கு தேனி வழியாக நெடுஞ்சாலை அமைப்பட்டுள்ளது. இந்த ரோடு தேனி நகர் பகுதிக்குள் வராமல் மதுராபுரி விலக்கு, போடி விலக்கு வழியாக செல்கிறது. இந்த ரோட்டில் வீரப்ப அய்யனார் மலைக்கோயில் செல்லும் ரோட்டிற்கு அருகே சிலர் தொடர்ந்து குப்பை கொட்டி வருகின்றனர். இந்த குப்பைக்கு சிலர் தீ வைக்கும் சம்பவமும் தொடர்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் டூவீலர்கள், வாகனங்களில் செல்லும் முதியோர், குழந்தைகள் சுவாச நோய்களுக்கு ஆளாகும் நிலை உள்ளது. சில நேரத்தில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை சூழ்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நச்சுப்புகையால் சுற்றுச்சூழலும் மாசடைகிறது. ரோட்டோரத்தில் குப்பை கொட்டுவோர் மீதும், அதற்கு தீ வைப்பவர்கள் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் இதுகுறித்து கண்டு கொள்ளாமல் இருப்பதால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை