உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள்; மறையூரில் மின்தடைக்கு வாய்ப்பு

ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள்; மறையூரில் மின்தடைக்கு வாய்ப்பு

மூணாறு : மறையூருக்கு மின்சாரம் கொண்டு செல்லும் மின்கம்பங்கள் பல இடங்களில் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளன.மூணாறில் இருந்து 42 கி.மீ., தொலைவில் மறையூர் உள்ளது. அங்குள்ள சப் ஸ்டேஷனுக்கு மூணாறு வழியாக மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. அதற்கு 42 கி.மீ., தூரம் ரோட்டில் இரும்பு கம்பங்கள் நடப்பட்டு மின் கம்பிகள் இணைக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு பருவ மழை துவங்கிய பிறகு பலத்த மழையால் மண்சரிவு, மரங்கள் சாய்ந்து மின் கம்பங்கள் பல இடங்களில் சேதமடைந்தன.மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் நகரை ஒட்டி ஜூலை 15ல் மண்சரிவு ஏற்பட்டு மின்கம்பங்கள் சேதமடைந்தன. அது போன்று பல பகுதிகளில் மின் கம்பங்கள் சேதமடைந்ததால் மறையூரில் ஒரு வாரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது.இந்நிலையில் நகரை ஒட்டி மண்சரிவு ஏற்பட்டு மின் கம்பம் கீழே விழும் நிலையில் மிகவும் ஆபத்தாக உள்ளது. இதே போல் பல பகுதிகளில் மின் கம்பங்கள் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளன. அவற்றை சீரமைக்கவில்லை எனில் அவை சேதமடைந்து மறையூரில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ