உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜீப் கவிழ்ந்து டிரைவர் பலி

ஜீப் கவிழ்ந்து டிரைவர் பலி

மூணாறு, : மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான குண்டுமலை எஸ்டேட் சோத்துப்பாறை டிவிஷனைச் சேர்ந்தவர் ஜீப் டிரைவர் முனியாண்டி 46. இவர் நேற்று மதியம் 1:30 மணிக்கு மூணாறில் இருந்து சோத்துப்பாறைக்கு ஜீப்பில் பயணிகளை ஏற்றிச் சென்றார். டிரைவர் உள்பட ஆறுபேர் ஜீப்பில் இருந்தனர். மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் பெரியவாரை எஸ்டேட் முதுவான்பாறை பகுதியில் ஜீப் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து இருபது அடி பள்ளத்தில் கவிழ்ந்து. அதில் டிரைவர் முனியாண்டி இறந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் 60, சற்று பலத்த காயங்களுடனும், எஞ்சியவர்கள் சிறிய காயங்களுடனும் உயிர் தப்பினர்.டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதாக பயணிகள் தெரிவித்தனர். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை