உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

ஆண்டிபட்டி : உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் சர்மிளா, ஜென்சி, நயனா, நாகஜோதி, பிரகதிகா ஸ்ரீ, தட்சணா, காயத்ரி, நிதிஷா ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தில் ஆண்டிபட்டி அருகே ஏத்தக்கோயில் கிராமத்தில் தங்கி, தொழில் நுட்ப பயிற்சி அளித்தனர். மண்புழு உரம் தயாரித்தல் குறித்தும், பழத்தின் சுவை கூடும், மண் வளம் அதிகரிக்கும், மகசூல் அதிகரிக்கும் உள்ளிட்ட பயன்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். மண்புழு உரம் அளவு, ஏக்கருக்கு எவ்வளவு பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட விபரங்கள் குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ