உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் பாதுகாப்புடன் 95 சதவீத பஸ்கள் இயக்கம்; பயணிகள் வருகை குறைவாக இருந்தது

போலீஸ் பாதுகாப்புடன் 95 சதவீத பஸ்கள் இயக்கம்; பயணிகள் வருகை குறைவாக இருந்தது

தேனி -: தேனி மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை தொர்ந்து நேற்று போலீஸ் பாதுகாப்புடன் 95 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பொது மககளின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை.போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திடவும், ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா போக்குவரத்து தொழிலாளர் பேரவை (அ.தி.மு.க.,) உட்பட 24 தொழிற்சங்கங்கள் இணைந்து காலவரையற்ற வேலை நிறுத்தததில் நேற்று முதல் ஈடுபட்டுள்ளது.இப் போராட்டத்தை பங்கேற்காத தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி., வி.சி. தொழிற்சங்கத்தினர் மூலம் மாவட்டத்தில் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. டெப்போக்கள் முன்பும், பஸ் ஸ்டாண்ட்டுகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன. காலையில் வழக்கம் போல் பஸ்கள் புறப்பட்டன. போராட்டம் என்பதாலும், மழையாலும் பயணிகள் வரத்து குறைவாக இருந்தது.தேனி மாவட்டத்தில் பெரியகுளம் டிப்போவில் 70 பஸ்கள் இயங்கின. கம்பம் 1, 2 டிப்போக்களில் 104 பஸ்கள் இயக்கப்பட்டன. போடியில் 72 பஸ்கள்,பழனிச்செட்டிபட்டி பணிமனையில் 87 பஸ்கள் இயங்கின. மாவட்டத்தில் உள்ள 383 பஸ்களில் 363 பஸ்கள் 95 சதவீத அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் பயணிகள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. வேலை நிறுத்த போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை