உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காட்டு யானைகள் துரத்தி மயக்கம் அடைந்தவர் மீட்பு

காட்டு யானைகள் துரத்தி மயக்கம் அடைந்தவர் மீட்பு

மூணாறு : மூணாறு அருகே இடமலைகுடி ஊராட்சியில் காட்டு யானைகள் விரட்டியதில் கீழே விழுந்து மயக்கமுற்ற மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்தவரை 13 மணி நேரத்திற்கு பிறகு மீட்டனர்.இடமலைகுடி ஊராட்சியில் அம்பலபடி குடியைச் சேர்ந்தவர் விஜயகுமார் 37. இவர் நேற்று முன்தினம் மூணாறுக்கு வந்து விட்டு வீடு திரும்பினார். அவர் இரவு 7:15 மணிக்கு வெள்ளவாரகுடி விலக்கு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இரண்டு காட்டு யானைகள் எதிர்பாராத வகையில் விஜயகுமாரை துரத்தியது. யானைகளிடம் இருந்து தப்ப முயன்று ஓடியவர் கீழே விழுந்து மயக்கம் அடைந்தார்.அவரை துரத்திய யானைகள் வேறு பாதையில் சென்றதால் உயிர் தப்பினார். நீண்ட நேரத்திற்கு பிறகு கண் விழித்த விஜயகுமாருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டதால் எழுந்து நடக்க இயலவில்லை. அதனால் இரவு முழுவதும் அடர்ந்த வனத்தினுள் கிடந்தார். அந்த வழியில் நேற்று காலை 8:00 மணிக்கு சென்ற சுமை தூக்கும் தொழிலாளர்கள் விஜயகுமாரை மீட்டு இடலிபாறை குடிக்கு கொண்டு வந்தனர். அங்கு வாகன வசதி இல்லாததால் மதியம் 2:00 மணிக்கு ஜீப் வரவழைக்கப்பட்டு 4:00 மணிக்கு அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு விஜயகுமார் சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை