உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தீவிபத்தில் பாதித்தோருக்கு உதவிகள் வழங்கல்

தீவிபத்தில் பாதித்தோருக்கு உதவிகள் வழங்கல்

மூணாறு, : மூணாறு அருகே கடலார் எஸ்டேட் வெஸ்ட் டிவிஷனில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஐ.என்.டி.யு.சி.,யைச் சேர்ந்த தென்னிந்திய தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டன.அங்கு ஜன.,12 இரவில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு வீடுகள் சேதமாகின. அதில் ஐந்து வீடுகளில் வசித்த தொழிலாளர்களின் பொருட்கள் அனைத்தும் எரிந்தது. அவர்களுக்கு ஐ.என்.டி.யு.சி.யைச் சேர்ந்த தென்னிந்திய தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உடைகள், கம்பளி உள்பட பல்வேறு பொருட்களுடன் தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. சங்க தலைவர் மணி, பொருளாளர் கருப்பசாமி, காங்., ஒன்றியத் தலைவர் விஜயகுமார், ஊராட்சி துணைத் தலைவர் பாலசந்திரன், ஊராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் நேரடியாகச் சென்று உதவிகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ