உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பள்ளி மோதல்களில் போலீஸ் தலையிடக்கூடாது

பள்ளி மோதல்களில் போலீஸ் தலையிடக்கூடாது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி:''பள்ளிகளில் மாணவர்கள் பிரச்னைகளில் போலீசார் தலையிடக்கூடாது. தலைமையாசிரியர்களே முடிவு எடுக்க வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலினிடம் முக்கியமான நபர் மூலம் சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தியுள்ளார்.திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் இடையே ஜாதி ரீதியான மோதல்கள் ஏற்படுகின்றன. கடந்த சில நாட்களில் வள்ளியூர் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ராதாபுரம், நாங்குநேரி, விஜயநாராயணத்தில் செயல்படும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நாங்குநேரி அரசு மேல்நிலைப்பள்ளி, மருதகுளம் அரசு பள்ளி உள்ளிட்டவைகளில் நடந்த மோதல்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து 20க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்து திருநெல்வேலி அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். திருநெல்வேலி சவேரியார் கல்லூரியில் நடந்த தமிழ்ப்புதல்வன் திட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்.பின் அவர் கூறியதாவது: பள்ளி மாணவர்களிடம் சிறு தள்ளுமுள்ளு, பிரச்னைகள் வருவது இயல்பு. மாணவர்களின் ஜாதியை குறிப்பிட்டு செய்தி வெளியாவதை தவிர்க்கலாம். ராதாபுரம் அரசு பள்ளியில் நான்கு மாணவர்கள் இத்தகைய பிரச்னைகளில் சிக்கிய போது அதில் சுமுக முடிவு ஏற்படுத்த பெற்றோர்கள் முயற்சித்தனர். வள்ளியூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த பிரச்னையில் சுமூகமாக சமரச முடிவெடுக்கப்பட்டது. ஆனால் 3 நாட்களுக்கு பிறகு செய்தி வெளியாகிறது.திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் ஜாதி மோதல்கள் எங்கும் நடக்கவில்லை. பள்ளிகளில் நடக்கும் மாணவர் பிரச்னைகளில் போலீஸ் தலையிடக்கூடாது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே அந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். சஸ்பெண்ட் செய்யலாம். அதற்கான உரிமை தலைமை ஆசிரியருக்கு உள்ளது. பள்ளிகளுக்கு வெளியே நடக்கும் சம்பவங்களில் போலீஸ் நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.போலீசார் தலையீட்டை தடுத்து தலைமை ஆசிரியர்களே நடவடிக்கை எடுக்க ஒரு முக்கியமான ஆள் மூலம் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தியுள்ளேன் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

RAMAKRISHNAN NATESAN
ஆக 11, 2024 11:53

பென்சிலுக்கு தகராறு, புத்தகத்துக்கு தகராறு என்றால் ஓகே. அதை ஆசிரியரே தீர்த்து வைக்கணும்.. மாணவர் மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்தாரா? அதையும் ஆசிரியர் தீர்த்து வைக்க வேண்டும்தான்.. கஞ்சா, மது கொண்டு வருதல், ஆசிரியர்களைத் தாக்குதல் இதெல்லாம் செஞ்சாங்க ன்னா கூட போலீச்சு தலையிடக் கூடாதா?? இவரெல்லாம் சபாநாயகாரா?? ஆசிரியராக இருந்தவரா ??


Matt P
ஆக 11, 2024 08:16

இவரும் வாத்தியாரா இருந்தவரூ . அந்த அனுபவத்தில் சொல்கிறார் போல.


Matt P
ஆக 11, 2024 08:15

ஸ்டாலின் முன்னாடி போய் நிக்க உடம்பெல்லாம் நடுங்குது. எனக்கு நடுவர் பதவியை தந்தவரு அவரு. திமுகவில் ரொம்ப தன மானம் உள்ளவங்க இப்போவும் இருக்காங்க போலிருக்கு. சபாநாயகர் சட்டசபையில் முதல்வர் பதவியை விட உயர்ந்த பதவி , அந்த பதவிக்கு களங்கம். நாட்டில முக்கியமானவங்க கொஞ்சம் இருக்காங்க. கஞ்சா விற்பவன் , சாராயம் விற்பவன் ...இந்த மாதிரி ஆளுங்க தான்.


Devan
ஆக 11, 2024 06:49

தேவையான போது சாதி வேண்டும். மற்ற சமயங்களில் வேண்டாம். போலீஸ் ம் வேண்டாம். நல்ல ஆட்சி


sankar
ஆக 10, 2024 19:50

சூப்பர் தலைவரே - போலீஸ் வரவிடாமல் அகழி அமைத்துவிடுங்கள் - சிறப்பான எதிர்காலம் எல்லாருக்கும் அமையும்


Sridhar
ஆக 10, 2024 14:38

கஞ்சா குடி போதையில சண்டைபோட்டாக்கூட போலீஸ் தலையிடக்கூடாதாமா?


Jysenn
ஆக 10, 2024 09:55

பழைய மூணாவது வகுப்பு வாத்தியார்ன்னா சும்மாவா ?


ஐராவதம்
ஆக 10, 2024 09:35

கள்ளக்குறிச்சி கலவரக்காரர்களை காப்பாத்த ஒரு சிறு முயற்சி.


karthik
ஆக 10, 2024 08:30

இவனுங்க எல்லாம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது காலத்தின் கொடுமை...


Svs Yaadum oore
ஆக 10, 2024 08:29

போலீசார் தலையீட்டை தடுத்து தலைமை ஆசிரியர்களே நடவடிக்கை எடுக்க ஒரு முக்கியமான ஆள் மூலம் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தியுள்ளேன் என்று செய்தி ....இது என்னய்யா கிறுக்குத்தனமாக உள்ளது ??....யார் அந்த முக்கியமான ஆள் .....சபாநாயகர் முதல்வரிடம் பேச குறுக்கே என்ன முக்கியமான ஆள்?? ....


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ