| ADDED : ஜூலை 30, 2024 06:46 AM
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் தேவேந்திரன், 36. இவரது தம்பி அரி, 32.இவர்கள் இருவருக்கும் திருமணம் முடித்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில். சகோதரர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.நேற்று முன்தினம் இரவு கிராமத்திற்கு அருகே மாந்தோப்பில் அரி இருந்துள்ளார், இதை கண்ட தேவேந்திரன், 'எனக்கு சேர வேண்டிய சொத்தை என் பெயருக்கு எழுதி வை' என கேட்டுள்ளார்.இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அரி, மறைத்து வைத்திருந்த கத்தியால், தேவேந்திரனின் முதுகில் இரண்டு இடங்களில் குத்தினார்.இதில், பலத்த காயமடைந்த தேவேந்திரன் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து தேவேந்திரன் அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.