உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இறுதி சடங்கில் மோதல் 5 பேர் கைது

இறுதி சடங்கில் மோதல் 5 பேர் கைது

திருத்தணி: திருத்தணி அடுத்த தாடூர் காலனி சேர்ந்த ஆறுமுகம், 65 என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, 28ம் தேதி இரவு இறந்தார். இறுதி சடங்கு நேற்று முன்தினம் நடந்தது. இறுதி சடங்கில் பங்கேற்ற அதே பகுதியைச் சேர்ந்த சங்கர், 48, வஜ்ரவேல், 61 ஆகிய இருவரும் நடனம் ஆடும் போது தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பின் இரு தரப்பினர் ஆதரவாளர்கள் இரும்பு ராடு, உருட்டு கட்டை, மற்றும் கற்களால் தாக்கிக் கொண்டனர்.இதில், 12 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் வழக்கு பதிந்து சங்கர் மற்றும் வஜ்ரவேல் ஆகிய தரப்பை சேர்ந்த. வல்லரசு,25, சஞ்சய், 20, இளங்கோ, 30, ரஞ்சித்குமார், 32 புருேஷாத்தமன், 34 ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை