உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சின்னமண்டலியில் சேதமான ரேஷன் கட்டடம்

சின்னமண்டலியில் சேதமான ரேஷன் கட்டடம்

திருவாலங்காடு : திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது சின்னமண்டலி கிராமம். இங்கு 200க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்இங்கு 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ரேஷன் கட்டடம் சேதம் அடைந்து விழும் நிலையில் உள்ளது.கட்டடத்தின் கூரை, சுவர்களில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுஉள்ளன. மேலும் தரைகள் பெயர்ந்து உள்ளதால் அப்பகுதிவாசிகள் அச்சம் அடைந்து உள்ளனர். கட்டடம் சேதமடைந்து உள்ளதால் மழை நீரில், அரிசி, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் நனைந்து வீணாகும் அபாயம் உள்ளது.கட்டடம் உறுதிதன்மை இழந்து உள்ளதால் ரேஷன் வாங்க வரும் நுகர்வோர் மீது சிமென்ட் பூச்சு விழுந்து விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை