உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 200 கிலோ கஞ்சா ஆவடியில் அழிப்பு

200 கிலோ கஞ்சா ஆவடியில் அழிப்பு

ஆவடி : ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், கமிஷனர் சங்கர் உத்தரவின்படி, போதைப்பொருள் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு இதுவரை, 247 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 410 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து, 813 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், 51 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 200 கிலோ கஞ்சாவை, நீதிமன்ற உத்தரவின்படி அழிக்க, ஆவடி போலீஸ் கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், தென் மேல்பாக்கத்தில் 'ஜி.ஜே., மல்டி கிளேவ் இந்தியா' என்ற தனியார் நிறுவனத்தில் உள்ள எரிவாயு எரியூட்டும் இயந்திரம் வாயிலாக, 200 கிலோ கஞ்சா, நேற்று எரித்து அழிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்