| ADDED : ஏப் 27, 2024 12:22 AM
கும்மிடிப்பூண்டி:பெத்திக்குப்பம் ரயில்வே மேம்பாலத்தில், சாலையோரம் மணல் மற்றும் குப்பைக் குவியல் மண்டியிருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெத்திக்குப்பம் ரயில்வே மேம்பாலம், மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பில் உள்ளது. அந்த மேம்பாலம் வழியாக, தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. மேம்பாலத்தில், துப்புரவு பணிகள் மேற்கொண்டு பல மாதங்கள் ஆகின்றன. அதனால், மேம்பால சாலையோரம் மணல் மற்றும் குப்பை குவியல்கள் மண்டி கிடக்கின்றன.அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், தடுமாறும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, மேம்பால இறக்கத்தில் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், சரிந்து விழும் நிலை ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். உடனடியாக பெத்திக்குப்பம் ரயில்வே மேம்பாலத்தில், மாநில நெடுஞ்சாலைத் துறையினர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.திருவாலங்காடு ஒன்றியம் ராஜபத்மாபுரம் -தொழுதாவூர் வரையிலான 2 கி.மீ., சாலை மண் சாலையாக இருந்தது.பழையனுார், ஜாகீர் மங்கலம், ராஜபத்மாபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு சின்னம்மாபேட்டை, திருவாலங்காடு ரயில் நிலையம் செல்ல வேண்டி இருந்ததால் அச்சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.இதையடுத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த சாலை, ஜல்லி, முறம்பு மண் கொட்டப்பட்டுமெட்டல் சாலையாக அமைக்கப்பட்டது.தற்போது மண், ஜல்லிகள் பெயர்ந்து சாலை பள்ளம் மேடாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இச்சாலை உள்ளது. மேலும் வாகன ஓட்டி கள் தாமாக விபத்தில் சிக்கும் சூழல் உள்ளதால் சேதமடைந்த மெட்டல் சாலையை தார்ச்சாலையாக உயர்த்தி சீரமைக்கவேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.