உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தரமற்ற குளிர்பானம் விற்பனை கூடாது

தரமற்ற குளிர்பானம் விற்பனை கூடாது

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கோடைகாலம் துவங்கிய சூழலில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தைக் குறைக்க பலவித குளிர் பானங்கள் மற்றும் பழச்சாறு அருந்துகின்றனர். சாலையோர மற்றும் நிரந்தர குளிர்பான விற்பனையாளர்கள், பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறு வழங்க வேண்டும்.அனைத்து வணிகர்களும், உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006-ன்படி உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். குளிர்பானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற பொருட்களாக இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலான செயற்கை வண்ணங்களை சேர்க்க கூடாது. அழுகிய பழங்களையும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களையும் பயன்படுத்த கூடாது.பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க போதுமான அளவு உடலின் நீர்ச்சத்தை பராமரித்து உடல் நலனை பேன குடிநீர், மோர் மற்றும் இளநீர் போன்றவற்றை அருந்துதல் மிகவும் நலம் பயக்கும். பொதுமக்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான புகாரை 94440 42322 என்ற மொபைல் எண், gmail.comஎன்ற இ- மெயிலிலும் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை