| ADDED : ஜூலை 31, 2024 02:53 AM
பொன்னேரி:பொன்னேரி தொழிலாளர் நலவாரிய உதவி ஆணையர் செய்திக்குறிப்பு:தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் நலவாரியத்தின் வாயிலாக, அதில் உறுப்பினராக உள்ளவர்கள் கல்வி, திருமணம், மகப்பேறு, வீட்டு வசதி திட்டம், ஓய்வு ஊதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் ஆகியவற்றிற்கு நிதியுதவி பெறமுடியும்.தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கும் வகையில், இணையம் சார்ந்த தொழிலாளர் நலவாரியம் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.தற்போது இணையம் சார்ந்த தொழிலாளர்கள் பதிவு செய்வதற்கு வசதியாக, பொன்னேரியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.ஆக.. 5ம் தேதி வரை தினமும் காலை 10:30 முதல் மாலை 5:30 மணி வரை தொழிலாளர்கள் விபரங்கள் பதிவு செய்யப்படும்.பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட இணையவழி பொருட்கள் மற்றும் உணவு வினியோகம் செய்யும் தொழிலாளர்கள், 'எண்: 58, சிந்துார் நகர், தடப்பெரும்பாக்கம் கிராமம், கொக்குமேடு பேருந்து நிலையம் அருகில், பொன்னேரி' என்ற முகவரியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்று உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை, பிறப்பு சான்று, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படும் ஆகியவற்றுடன் வரவேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2797 2221, 044 - 2957 0497 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.