உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாமல்லையில் தேசிய சர்பிங்

மாமல்லையில் தேசிய சர்பிங்

மாமல்லபுரம்:இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அலைசறுக்கு சங்கம் ஆகியவை இணைந்து, தேசிய 'சர்பிங்' போட்டிகளை நடத்துகின்றன.தேசிய சாம்பியன் மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு தகுதி பெறும் வகையில், இங்குள்ள வீரர்களை தேர்வு செய்ய, பல நிலைகளில் போட்டி நடத்தப்படுகிறது.'மஹாப்ஸ் பாயின்ட் பிரேக் சேலஞ்ச்' போட்டி, நேற்று மாமல்லபுரத்தில் துவக்கப்பட்டது. 16 வயதிற்குட்பட்ட, 17 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவு, முதல், இரண்டாம், மூன்றாம் சுற்றுகள் நடத்தப்பட்டன.அதே வயது பெண்கள், அரையிறுதி போட்டியும் நடத்தப்பட்டது. 62 பேர் பங்கேற்றனர். இன்றும், அதே வயது பெண்கள் பிரிவு நடத்தப்படுகிறது.இறுதி போட்டி, 'கோவலாங் கிளாசிக்' என, ஆக., 8ம், 9ம், 10ம் தேதிகளில், கோவளத்தில் நடத்தப்படுகிறது. இந்திய 'சர்பிங்' கூட்டமைப்பு தலைவர் அருண்வாசு கூறியதாவது: இப்போட்டியில், எட்டு மாநிலங்களைச் சேர்ந்த 100 வீரர்கள் விளையாடுகின்றனர். தமிழகத்தில் அதிக வீரர்கள் உள்ளனர். கோவளத்தில், 10வது ஆண்டாகவும், மாமல்லபுரத்தில் மூன்றாவது ஆண்டாகவும், இதை நடத்துகிறோம்.ஒலிம்பிக் போட்டியில், முதல் முறையாக 'சர்பிங்' சேர்க்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக், 2026 ஆசிய விளையாட்டிலும், நிச்சயம் நாம் வெல்வோம் என நம்புகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை