உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.3 கோடி அரசு நிலம் பஞ்., தலைவரிடம் மீட்பு

ரூ.3 கோடி அரசு நிலம் பஞ்., தலைவரிடம் மீட்பு

பெரியபாளையம் :திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஏனம்பாக்கம் ஊராட்சி தலைவர் பாபு. இவர், ஏனம்பாக்கம் வண்டிப்பாதை நிலத்தை ஊராட்சி தலைவர் பாபு, துணைத்தலைவர் ப்ரீத்தி உள்ளிட்டோர், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆக்கிரமித்து, விவசாயம் செய்து வந்துள்ளனர்.இது குறித்து வருவாய் துறையினருக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை தொடர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரி, 2021ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதைத்தொடர்ந்து, ஊத்துக்கோட்டை தாசில்தார் மதன் தலைமையில் வருவாய்த் துறையினர் நேற்று முன்தினம் ஜே.சி.பி., இயந்திரம் மூலம், 5 ஏக்கர் விவசாய நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு 3 கோடி ரூபாயாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை