| ADDED : ஆக 13, 2024 09:46 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், கலெக்டர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர், சமூக நலத்துறை உள்ளிட்ட மாவட்ட தலைமை அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன.இந்த வளாகத்தில், ஊரக வளர்ச்சித் துறை, வனத்துறை, கூட்டுறவு துறை, எஸ்.பி., அலுவலகம், மாவட்ட முதன்மை கல்விஅலுவலகம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள்இயங்கி வருகின்றன.இங்குள்ள அலுவலகங்களில் 800க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர். பெரும்பாலானோர், ரயிலில் வந்து கலெக்டர் அலுவலகம் செல்ல வேண்டி உள்ளது. மேலும், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம்உள்ளிட்ட கூட்டங்களுக்கு மனு அளிக்க ரயில் மூலம் வருகின்றனர்.ரயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடி பேருந்து இல்லாததால், ஊழியர்களும், பொதுமக்களும் அங்கிருந்து, இரண்டு பேருந்து மாறிச் செல்ல வேண்டி உள்ளது.ஒரு சிலர் கூடுதல் செலவழித்து ஆட்டோவில் நபர் ஒருவருக்கு கூடுதல் கட்டணம் செலுத்தி, வர வேண்டி உள்ளது.எனவே, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து தேரடி வரை இயக்கப்படும் பேருந்துகளை, கலெக்டர் அலுவலகம் வரை நீட்டிக்க பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.