உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடிநெல்வாயல் - அண்ணாமலைச்சேரி பல்லாங்குழி சாலையை சீரமைக்க கோரிக்கை

குடிநெல்வாயல் - அண்ணாமலைச்சேரி பல்லாங்குழி சாலையை சீரமைக்க கோரிக்கை

பொன்னேரி:பொன்னேரி அடுத்த குடிநெல்வாயல் கிராமத்தில் இருந்து, அண்ணாமலைச்சேரி, 5 கி.மீ., சாலை, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு அதில் மழைநீர் தேங்கி உள்ளது. பள்ளங்களில் வாகன ஓட்டிகள் வளைந்து வளைந்து பயணிக்கின்றனர்.சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு, அவை வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில் குச்சிகளை அதில் பதித்து வைத்து உள்ளனர். பெயர்ந்து கிடக்கும் சரளைக் கற்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர்.இந்த சாலை, கடந்த, 2019ல் பிரதம மந்திரி சாலை திட்டத்தில் புதுப்பிக்கப்பட்டது. தொடர் பராமரிப்பு இல்லாத நிலையில், தற்போது சேதம் அடைந்து இருக்கிறது.இந்த வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து குறைவாக இருப்பதால், கிராமவாசிகள் இருசக்கர வாகனங்களையே நம்பி உள்ளனர். சாலை சேதம் அடைந்து இருப்பதால், அவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேற்கண்ட சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி