உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காரில் எடுத்து சென்ற ரூ.50 ஆயிரம் பறிமுதல்

காரில் எடுத்து சென்ற ரூ.50 ஆயிரம் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில், தண்டலச்சேரி பகுதியில், துணை தாசில்தார் சம்பத் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது, சென்னை, பாடி பகுதியை சேர்ந்த பிரபாகரன், 63, என்பவர் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் கணக்கில் வராத, 50 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி சட்டசபை தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ் முன்னிலையில், பணத்திற்கு சீல் வைத்து கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. நில பத்திரவு செலவுக்காக, 50 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து சென்றதாக, பிரபாகரன் தெரிவித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்