உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் விரைவு ரயில் மீது மாணவர்கள் கல்வீச்சு

திருத்தணியில் விரைவு ரயில் மீது மாணவர்கள் கல்வீச்சு

திருத்தணி:மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் விரைவு ரயில் நேற்று மாலை திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. அப்போது பள்ளி சீருடை அணிந்த மாணவர்கள் சிலர் ரயிலின் 'ஏசி' பெட்டி மீது கல் வீசி தாக்கினர். இதில், பி 3 ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடி விரிசல் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணியருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அரக்கோணம் ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி