உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இளம்பெண் தற்கொலை; ஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் தற்கொலை; ஆர்.டி.ஓ., விசாரணை

கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியம் தொடுகாடு பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார் மகன் ஸ்டீபன்ராஜ், 30. மனைவி நதியா. 2020ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நதியா மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த மப்பேடு போலீசார் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நதியாவின் சகோதரர் தமிழ்செல்வன் கொடுத்த புகாரின்படி மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ.,விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை