உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தே.மு.தி.க.,விற்கு திருவள்ளூர் தொகுதி பாதியில் முடிந்த அ.தி.மு.க., கூட்டம்

தே.மு.தி.க.,விற்கு திருவள்ளூர் தொகுதி பாதியில் முடிந்த அ.தி.மு.க., கூட்டம்

திருவள்ளூர்:தே.மு.தி.க.,விற்கு தொகுதி ஒதுக்கீடு செய்த தகவல் அறிந்ததும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணியில், காங்.,க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அ.தி.மு.க., சார்பில் அக்கட்சி வேட்பாளர் போட்டியிடுவார் என கருத்தில் கொண்டு, நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை, ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். திருவள்ளூர் அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரமணா, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்காளர் பட்டியல் விபரங்களை, கட்சியினருக்கு அளித்து, அவர்களை 'கவர' பல்வேறு ஏற்பாடு செய்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை, திருவள்ளூர் அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில், ஒன்றிய, நகர, ஊராட்சி செயலர்களுடன் ஆலோசனை கூட்டத்தில், ரமணா பங்கேற்று பேசிக் கொண்டிருந்தார்.அப்போது, திருவள்ளூர் தொகுதி கூட்டணி கட்சியான, தே.மு.தி.க.,விற்கு ஒதுக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த ரமணா மற்றும் கட்சி தொண்டர்கள், கூட்டத்தை பாதியில் நிறுத்தி விட்டு சென்றனர். இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:தமிழகத்தில், அ.தி.மு.க.,விற்கு வெற்றி நிச்சயம் என்று நம்பப்படும் தொகுதியில் திருவள்ளூரும் ஒன்று. இம்முறையும் அ.தி.மு.க., வேட்பாளரே போட்டியிடுவார் என கருதி, லோக்சபா தொகுதியில், வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் வாரியாக தொண்டர்களை நியமித்து தேர்தல் பணியை துவக்கி விட்டோம். பாதி பணி நிறைவடைந்த நிலையில், தற்போது கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி