உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உலக கால்நடை மருத்துவ தினம்

உலக கால்நடை மருத்துவ தினம்

திருத்தணி:உலக கால்நடை மருத்துவ தினம், விலங்குகள் மற்றும் பறவைகளின் நலம் காக்கும் கால்நடை மருத்துவப் பணியாளர்களின் உன்னத சேவையைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமை நாளில், உலக கால்நடை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று திருத்தணி கால்நடை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில், உலக கால்நடை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. இதில், திருத்தணி கால்நடை துறை உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன் தலைமையில், கால்நடை உதவி மருத்துவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.நிகழ்ச்சியில், திருத்தணி வருவாய் கோட்டத்தில் பணியாற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் பங்கேற்றனர். மத்துார் கால்நடை உதவி மருத்துவர் கீதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி